மட்டக்களப்பில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

189 0

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில், நேற்று அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் 110 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும் 50பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பரிசோதனையிலேயே 7பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.