நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் – சம்பிக்க

327 0

பசில் ராஜபக்ச வெளிநாட்டில் இருந்த சுமார் 40 நாள் காலத்தில் நாட்டில் விசேடமான பொருளாதார நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே ஏற்பட்டது.

வணிக கடன்களை பெற்று வருமானத்தை பெற முடியாத இடங்களில் அவற்றை முதலீடு செய்தமையே இதற்கு காரணம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு பசில் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்புக் கூற வேண்டும்.

இதனால், தனது தாய் நாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்பியுள்ள பசில் ராஜபக்சவினால் எந்த பெரிய வெற்றியை காண்பிக்க முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.