இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3000க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் கச்சத்தீவைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட முயற்சித்த போது இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இந்த மாதத்தில் மாத்திரம் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 30 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.