எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் தற்போது இணைந்து செயற்படுகின்றனர்.
எனினும் அவர்கள் அடுத்த தேர்தலில் தங்களின் உண்மையான கூட்டணியுடன் இணைந்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.