ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் இன்றுக்காலை கண்டறியப்பட்டுள்ளன.
மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் விறகு பொறுக்குவதற்காக சென்ற கிராமவாசிகள், கைக்குண்டொன்றை கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் நடத்திய தேடுதலில் மேலும் இரண்டு கைக்குண்டுகள் அவ்விடத்திலேயே மீட்கப்பட்டுள்ளன. அந்த மூன்று கைக்குண்டுகளையும் செயலிழக்கும் படையினருக்கு கையளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

