இணையத்தை பயன்படுத்தி 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான கடற்படையின் விசேட வைத்திய நிபுணர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று முதல் அமுலாகும் வகையில் பணி நிறுத்தம் செய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவினால் குறித்த வைத்தியர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையினரால் உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்கிசையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

