முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர், நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.அதனையடுத்து, வெற்றிடமாகி இடத்துக்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது.

