உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள ஒப்பந்த ஊழியர் 8ஆயிரம் பேருக்கு நிரந்தர நியமனம்

525 0

உள்ளூராட்சி மன்றங்களில் சாதாரண அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதை அரசு விரைவுபடுத்தும் என்று பொதுச் சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமைய மற்றும்ஒப்பந்த அடிப்படையில் உள்ளூராட்சி அமைப்புகளில் பணிபுரியும் சுமார் 8 ஆயிரம் ஊழியர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்துமாறு தனக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பிரதமர் அறிவுறுத்தினார் என அமைச்சர் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நிதியமைச்சராக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிவை முன்வைப்பார் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டார்.