திருகோணமலையில் மக்கள் குடியிருப்பினுள் முதலை!

230 0

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பினுள் முதலை ஒன்று உற்புகுந்ததால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் நேற்று இரவு ஏற்பட்டிருந்தது.

திருகோணமலை 4ம் கட்டை சிங்ஹபுர பகுதியில் உள்ள வீடொன்றினுள் குறித்த முதலை உற்புகுந்ததால் அப்பகுதிவாசிகள் பதட்டமடைந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தாரிடம் தகவல் வழங்கியிருந்த நிலையில், குறித்த இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாரிய சிரமங்களுக்கு மத்தியுல் குறித்த முதலையானது மீட்கப்பட்டது.

நான்கு அடி நீளம் கொண்ட குறித்த முதலையானது,ஆண்டான் குளம் பகுதியில் உள்ள வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தாரால் தெரிவிக்கப்பட்டது