பருத்தித்துறையில் 12 பேருக்குக் கொரோனா!

300 0

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களிடம் எழுமாற்றாக நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின்போது 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஐவருக்கும், மந்திகை சந்திப் பகுதி வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் உட்பட்ட வியாபாரிகள் ஐவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களின் பிள்ளைகள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.