அரிசியின் விலை குறைவடையும்-துமிந்த பிரியதர்ஷன

229 0

siஎதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என்று நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

சிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை விரைவில் குறைவடையும் என்று அவர் கூறினார்.

இதேவேளை அரிசி விலையை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.