சிறுமி கடத்தல் விவகாரம்- இணையத்தளத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

244 0

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தை பிரசுரித்த இணையத்தளத்தின் உரிமையாளரும் அதன் பணக் கட்டுப்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

43, 45 வயதான குறித்த நபர்கள் பாணந்துறை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது