எதிர்க்கட்சியினர் வௌியேறிய பின் வாக்கெடுப்பு – சட்டமூலம் தோல்வி

260 0

161421165untitled-1அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், மத்திய மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த சட்டமூலம் வாக்களிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் இது தொடர்பான விவாதம் அவசியம் எனக் கூறினர்.

எனினும் ஆளுந்தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வௌியேறியுள்ளனர். பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 36 பேரில் 32 பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மற்றைய நால்வரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.