மத்திய வங்கியின் ஒதுக்கங்களை பலப்படுத்த இரண்டு நாணய இடமாற்று ஒப்பந்தங்கள்

257 0

மத்திய வங்கியின் ஒதுக்கங்களை பலப்படுத்த, இந்தியாவிடம் இருந்து இரண்டு நாணய இடமாற்று ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளப்படவுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுனர் டபிள்யு. டி. லக்ஸ்மன் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்பாய்ச்சப்படும் வகையில் 400 மில்லியன் டொலருக்கான தென்னாசிய நிதியத்தின் நாணய இடமாற்று ஒப்பந்தம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனை அடுத்து விசேட நாணய இடமாற்று ஒப்பந்தம் ஒன்று இந்திய ரிசேர்வ் வங்கியுடன் 1000 மில்லியன் டொலர்களுக்காக மேற்கொள்ளப்படுவதுடன், இந்த நிதியும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் உள்பாய்சப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக பங்களாதேஸ் மத்திய வங்கியுடனான 250 மில்லியன் டொலர் நாணய இடமாற்று உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதுடன், இந்த நிதி ஜுலை மாதம் உள்பாய்ச்சப்படும்