ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மேலும் 150 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

258 0

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மேலும் 150 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுக் கொள்ளவுள்ளது.

கொவிட் பரவலைத் தடுக்கவும், முகாமை செய்யவும் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 161.85 மில்லியன் டொலர்களாகும்.

அதில் இலங்கை அரசாங்கம் 11.85 மில்லியன் டொலர்களை நிதியிடவுள்ளது.