உற்பத்தி குறைவால் அதிகரிக்கும் பாக்கு விலை

179 0

சந்தையில் தற்போது பாக்கின் விலை அதிகரித்துள்ளது.  உற்பத்தி குறைவடைந்தமையின் காரணமாகவே விலை அதிகரித்துள்ளதாக பாக்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சில பிரதேசங்களில் பாக்கு ஒன்றின் விலை 15 முதல் 20 ரூபா வரையில அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

>தும்பர மிட்டியாவத்த, மெத தும்பர, குண்டசாலை, பன்விலை முதலான பகுதிகளில் பாக்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

எனினும் நிலவும் காலநிலை காரணமாக, பாக்கு உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.