புதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்ப வேண்டும்

286 0

suresh-premachandranபுதிய அரசியல் சாசனத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டை மத்திய அரசே முழுமையாக கையாளுமாயின் மாகாண சபையால் எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் சார்பாக கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், வடக்கு கிழக்கை இணைக்க முடியாதென்றும் ஒற்றையாட்சியை விடமாட்டோம் என்றும் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்றும் அரசாங்கம் கூறி வருவதானது எவ்வாறான ஒரு தீர்வு ஏற்படப் போகின்றது என்பது மீண்டும் கேள்விக்குறியாகவே உள்ளதென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.