திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை (காணொளி)

404 0

kiliஇந்தியா திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திருச்சி சிறப்பு  முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள்  என அவர்களது பெற்றோர்களும், மனைவிமாரும் இன்று கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் ஒரு பெண் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தகாலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த தங்களுக்கு தங்களது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி மேலும் தம்மை மனதளவில் பாதித்துள்ளது என்றும், எனவே  அவர்கள் சில வேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மன்னித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பத்து பேரில் ஒருவரின் தந்தையான உமாகாந்தன் தெரிவித்துள்ளார்.