வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

266 0

255771485untitled-1வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

செல்வி நேசராணி தங்கராஜா சம்மந்தமாக மறைந்த முன்னால் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் முதல்வர் கலாநிதி அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு இறுதியாக தொகுத்த பாராட்டு மலர் வெளியீடு நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதியாகவும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மாவை சேனாதிராசா,வடகிழக்கு இணைப்பு என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு 18 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. முஸ்லிங்களும், தமிழர்களும் இணைந்த வடகிழக்கு தாயகத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எமது குறிக்கோள்.

வடகிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து வரவேண்டும் என்று இன்றும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். சென்ற முறை மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் எங்களுக்கு தேவை என்பதற்காக முதலமைச்சு பதவியினையும் கொடுத்தோம், ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பது ஒரு துரதிஸ்ரவசமான உண்மை.

நாங்கள் வடகிழக்கு இணைப்பு பற்றி ஜனாதிபதியிடம் கூறினோம். அதற்காக வேண்டி முஸ்லிம்களுடன் பேசுங்கள் என்று கூட கூறினோம். அதற்காக நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழலுக்குள் இருக்கின்றோம். வட்டுக்கோட்டை தீர்மானத்தினை நாங்கள் இப்பொழுது கோரவில்லை மாறாக பூரண அதிகாரத்தை கொண்டிருக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினையே கேட்டு நிற்கின்றோம் என்றார்.