போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

217 0

jayalalitha-house-poes-gardமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு அறையில் ஜெயலலிதா பார்க்க வேண்டிய கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த 2 அறைகளை சோதனையிடத்தான் தற்போது 2வது முறையாக போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.

முன்னதாக ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 1996ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

நல்லம நாயுடு தலைமையிலான இந்த ரெய்டில் 100 உயர் ரக கைக்கடிகாரங்கள், 30 கிலோ தங்கம், 400 ஜோடி வளையல்கள், 500 கிலோ வெள்ளி, 10,000 சேலைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன.

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.