சட்டத்தில் இருந்து சசிகலா தப்புவாரா?

247 0

tamil_news_large_1677608சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்து விட்டாலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் விடை கிடைக்கும் என்பது உறுதி.

வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ஜெயலலிதா மீது, கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கூட்டு சதி மற்றும் சொத்துகள் சேர்ப்புக்கு உடந்தையாக இருந்ததாக, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த, 1996இல் பதிவான இந்த வழக்கில், 18 ஆண்டுகளுக்கு பின், தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதற்குமுன், இவ்வழக்கு பல கட்டங்களை, அடுத்தடுத்து தாண்டி வந்தது.

தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில் தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிபோனது.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் சிறை அடைக்கப்பட்டனர்.

20 நாட்களுக்கு பின், உச்ச நீதிமன்றம், நான்கு பேருக்கும் பிணை வழங்கியது.

பிணையில் வெளியே வந்ததும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நடந்தது.

மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனுவை, நீதிபதிகள், பி.சி.கோஷ், அமித்வ ராய் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணைக்கு பின், 2015 ஜூனில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

விசாரணை முடிந்து, ஆறு மாதங்கள் ஆகிய நிலையில், மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அதுவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான ஜெயலலிதா, மரணமடைந்துள்ளார்.

அவர் மறைந்து விட்டாலும், வழக்கின் மீதான உத்தரவு பிறப்பிப்பதில், எந்த பாதிப்பும் வராது என வழக்கறிஞர்கள் தரப்பின் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டால், அவருக்கு தண்டனை விதிக்கமுடியாது என்பது சரி தான்.

ஆனால், அதே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு, அந்த தீர்ப்பின் பலன் போய் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.