ரஞ்சன் ராமநாயக்க ; மீண்டும் சிறைக்கு

381 0

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு , மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் , ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டுள்ள , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று சனிக்கிழமை கராபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்

வைத்தியரின் ஆலோசனைக்கமைய சிகிச்சைக்காகவே இவர் இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்ததுடன் , அவருக்கான சிகிச்சைகள் முடிவுற்றதும் , அவர் மீண்டும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.