மட்டக்களப்பில் கொரோனாவினால் ஒரு நாளில் 3 பேர் உயிரிழப்பு; 232 பேருக்கு கொரோனா

160 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 232 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை மாவட்டத்தில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 46 பேருக்கும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் , வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும் என 232 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 61 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால்இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.