முரண்பாடுகளுக்கு ஆளும் கட்சி தீர்வைக் காணாவிடில் கூட்டணி பலவீனமடையும் – வாசு எச்சரிக்கை

261 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இல்லாவிடின் கூட்டணி பலவீனமடையும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் ; வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக எடுக்கவில்லை அதற்கான அதிகாரமும் அவருக்கு கிடையாது. ; ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை ; வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என ;பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் ; 8 பிரதான பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்

இவ்வாறான நிலையில்  வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக   ;ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர உள்ளார்கள்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறாது என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிக்கும், ; பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு விரைவில் ஒரு தீர்வு பெற வேண்டும். இல்லாவிடின் கூட்டணி பலவீனமடையும் என்றார்.