ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் பதினோறாவது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.
ஜோசப் பரராஜசிங்கம்; மனித உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கும் எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த விசாரணைகளில் திருப்தியில்லாத நிலையில் அதை எண்ணி தாம் கவலையடைவதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

