ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்திருந்த கிறிஸ்த்தவ ஆலயம் ஒன்று 2005 சுனாமி நினைவாலயமா மற்றப்பட்டு அங்கு வருடம்தோறும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இன்றைய தினம் நடைபெற்ற ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தையர்கள் மற்றும் மதத் தலைவர்கள், ஆழிப்ரேலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

