யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

446 0

jaff-dsயாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.சுனாமி அனர்தத்தினால் பலியானோருக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி, யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.