தயார்நிலை சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம்

398 0

500px-Sri-Lanka-demographyவலையமைக்கப்பட்ட தயார்நிலை சுட்டெண் பட்டியலில் இலங்கை 2 இடங்கள் முன்னேறி இருக்கிறது.

139 நாடுகளுக்கு இடையிலான தரப்படுத்தலில், இலங்கை இந்த ஆண்டு 63வது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 65ம் இடத்திலும், 2014ம் ஆண்டு 76ம் இடத்திலும் இலங்கை இருந்தது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் ஊடாக வழங்கப்படுகின்ற வர்த்தக வாய்ப்புகளை, போட்டித்தன்மை மற்றும் நற்செயற்பாடு என்பவற்றை அதிகரிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்ற அடிப்படையில் இந்த சுட்டெண் கணிக்கப்படுகிறது.