மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீட்டுத்திட்டத்தை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வர முயற்சித்தால், பொருத்துவீட்டுத்திட்டத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பெற்றுக்கொண்ட இலஞ்சத்தை வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

