நோக்கியா சார்ந்த சாதனங்களை புறக்கணித்தது ஆப்பிள்

399 0

201612251053083483_apple-pulls-out-nokia-owned-withings-products-from-its_secvpfஆப்பிள் மீது மற்றொரு காப்புரிமை குற்றச்சாட்டு எழுந்திருப்பதை தொடர்ந்து, நோக்கியா சார்ந்த சாதனங்களை ஆப்பிள் முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறது.

நோக்கியா சார்ந்த காப்புரிமைகளை ஆப்பிள் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி சில தினங்களுக்கு முன் நோக்கியா நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து நோக்கியா கைப்பற்றிய வித்திங்ஸ் நிறுவனம், தயாரித்து ஆப்பிள் விற்பனை செய்து வந்த பல்வேறு சாதனங்களின் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தி உள்ளது.
நுகர்வோர் மின்சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் வித்திங்ஸ் நிறுவனத்தை நோக்கியா நிறுவனம் சுமார் 190 மில்லியன் டாலர்களுக்கு கைப்பற்றியது. நோக்கியா டிஜிட்டல் மருத்துவ சேவைகளை வழங்கும் பிரிவாக செயல்பட வித்திங்ஸ் நிறுவனம் கைப்பற்றப்பட்டது.
வித்திங்ஸ் தயாரித்து ஐஓஎஸ் இயங்குதளம் சார்ந்து இயங்கும் பல்வேறு சாதனங்களின் விற்பனையை ஆப்பிளின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. காப்புரிமை சார்ந்த குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து ஆப்பிள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே நோக்கியா மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் இருந்து வந்தது.
இந்நிலையில் நோக்கியா சார்பில் ஆப்பிள் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய குற்றச்சாட்டுகளில் டிஸ்ப்ளே, யூஸர் இன்டர்ஃபேஸ், மென்பொருள் மற்றும் வீடியோ கோடிங் சார்ந்து 32 காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.