ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து சுமார் 100 பேருடன் சென்ற விமானம் திடீரென்று மாயமானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது.
காணாமல் போன விமானத்தில் 81 பயணிகளும், விமானிகள் உள்பட பத்து பேரும் சென்றதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.