பகமூன, கோணஆர பிரதேசத்தில் இரத்திணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் அகழ்விற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேலே இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததால் மண்ணுக்குள் புதைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் பகமூன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொல்அத்துவாடிய, அதரகல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் வைத்தியசாலையில் பிதேர பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பகமூன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

