புதிய பட்டு சாலை திட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: சீனா

260 0

201612240507553691_want-to-know-indias-response-to-pakisthan-new-silk-road_secvpfபாகிஸ்தான் வழியாக அமைக்கப்பட உள்ள புதிய பொருளாதார பாதை திட்டம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

CPEC எனப்படுவது சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழிப்பாதை திட்டம் ஆகும். இந்த பொருளாதார வழிப்பாதையில் சுமார் 46 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த திட்டம் சீனாவின் மேற்கு பகுதிகளை அரேபிய கடல் பகுதியுடன் பலுசிஸ்தான் வழியாக இணைக்கிறது. அதேபோல், இந்த திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வழியாக அமைக்கப்பட உள்ள புதிய பொருளாதார பாதை திட்டம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுயிங் கூறுகையில், “இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நல்லதொரு சமிக்கையை தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பொருளாதார பாதை திட்டம் பாகிஸ்தான் நலனுக்காக மட்டுமல்லாது, ஆசியா மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்