மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானப் பாகமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு மர்ம பொருள் கிடப்பமை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை பார்வையிட்ட பின்னர் இது விமானத்தின் பாகம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள பாகமானது எந்த நாட்டின் விமானத்தின் பாகம் என்பது உறுதிபடுத்த முடியாதுள்ள நிலையில், இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக குறித்த பாகத்தினை விமானப் படையினர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




