புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை – அரசாங்கம்

218 0

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட  தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.