முல்லைத்தீவு   நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன்

253 0

ravikaran_1முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில், முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நேற்று இடம்பெற்ற 2ஆம் நாள் விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 510 ஏக்கர் நிலம் படையினர், வனவள பரிபாலனசபை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. படையினரால் மட்டும் 16 ஆயிரத்து 910 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

இந்த 35 ஆயிரம் ஏக்கர் என்பது முதற்கட்ட தகவல் மட்டுமே. இதனை விடவும் அதிகமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவதன் மூலம் மாவட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றதை சபையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்’ என மேலும் தெரிவித்தார்