கிழக்கு கடற்பரப்பில் விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் மிதக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – பாசிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் விமானமொன்றின் பாகமொன்று என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் மிதப்பதாக மீனவர்கள் கடற்படையிடம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக இது விமானமொன்றின் பாகமாக இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு கடற்படையின் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் அக்ரம் அளவி டான் செய்திகளுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, இது 100 வீதம் விமானத்தின் பாகமாக இருக்கும் என்பதனை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என விமானப்படை பேச்சாளர் வின் கொமாண்டர் செனவிரத்ன எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
எனினும், கடற்படையினரால் குறித்த பாகங்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், குறித்த மர்மப் பொருள் என்னவென்பது தொடர்பில் உறுதியாக கூற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்;.

