முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது- மலிக் சமரவிக்ரம

260 0

malik-samarawickrama-21-12-2016முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படாது என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர்களுடன் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் இந்த வெள்ளிகிழமை கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார். அவர்களின் அதிகாரங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படமாட்டாது. ஜனாதிபதியுடன் இந்த விடயத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் அவ்வாறு இல்லையென்றால் எவ்வாறு அனுமதி கிடைக்கும். அதிக அதிகாரங்களை கொண்ட அமைச்சு பதவிகள் எமக்கும் தேவையில்லை. நாங்களும் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

பஷிலை போன்ற அதிக அதிகாரங்களை கொண்ட அமைச்சர்களை நாங்களும் கடந்த காலங்களில் அவதானித்திருந்தோம். அமைச்சர்களுக்கு புதிய அதிகாரங்கள் தேவை என அமைச்சர் வீரகொடி  இன்றைய பத்திரகையொன்றுக்கு தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதத்தில் இந்த சட்டமூலத்தை கொண்டு வர நாம் எதிர்பார்க்கின்றோம்.