தமிழக மீனவர்கள் கைது

396 0

tamil-daily-news_69167292119அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 தமிழக மீனவர்கள் மன்னார் தாழ்வுபாடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், கைதானவர்கள் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.