உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த மே மாத்தில் – ஜனாதிபதி

275 0

mythiribala-6666s-720x480எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு மே மாதம் நிச்சயம் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடம் அறிவித்துள்ளார்.

மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளார்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இந்த ஒன்றுக் கூடலில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்பில் குமார் வெல்கமவும் பங்குக்கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வருட இறுதியில் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்பில் இந்த ஒன்றுக்கூடலில் கலந்து கொண்டமை தொடர்பில், குமார் வெல்கமவிடம் கூடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் வழங்கிய அவர், தாம் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியிலேயே கலந்துக் கொண்டதாகவும், சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருக்கும் வரையில் தாம் கூட்டு எதிர்கட்சிலேயே இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நிச்சியம் இடம்பெறும் என ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.