முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாக்குவாதம் (காணொளி)

288 0

kili-vakkuvathamமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்ட வேண்டும் என வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது தங்களுடைய வாழ்வாதாரத்தொழிலாக தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியை மேற்கொண்டுவரும் தொழிலாளர்கள், பெரும்பான்மையின மீனவர்கள்; அத்துமீறி தொழில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளால் தாங்கள் குறித்த மீனவர்களாலும் அவர்களுக்கு சார்பாக செயற்படும் பொலிஸாராலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து மண்டபத்திற்குள் புகுந்த இருபது வரையான சிங்கள மீனவர்களால் மாவட்டச்செயலகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தண்ணிமுறிப்புக்குளத்தின் சுமார் 150 வரையான மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இருபது சிங்கள மீனவர்கள் எதுவித அனுமதிகளும் இன்றி குளத்தில் மீன்பிடியில் ஈடுகின்றனர்.

இவ்வாறு அனுதியின்றி தொழில்புரியும் சிங்கள மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன.கடந்த 2012ஆம் ஆண்;டு இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள இரண்டு நன்னீர் மீன்பிடிச் சங்;கங்களின் அங்கத்தவர் மாத்திரம் தொழில் செய்யமுடியும் என்றும் கட்டளையிடப்;பட்டிருந்தது. இருந்தும் தற்போது குறித்த முரண்பாடு நீடித்து வருகின்றது.

இவ்வாறான முரண்பாடுகளின்போது தமிழ்முஸ்லீம் மீனவர்;களால் செய்யப்படுகின்ற பொலிஸ் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நடடிக்கை மேற்கொள்வதே கிடையாது என்றும், சிங்கள மீனவர்கள் பொலிசாருக்குத் தகவல் வழங்கினால் பொலிசார் உடனடியாக செயற்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.எனினும், கரைதுரைப்பற்று பிரதேசத்தில் உள்ள குளத்தில் தாங்கள் 1983ஆம் ஆண்டிலிருந்து மீன்பிடித்து வருவதாகவும், முல்லைத்தீவு மாவட்டம் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்;கள் பல்லினமாக வாழும் மாவட்டம் என்றும், எனவே தமிழர்களும், முஸ்லீம்களும் மட்டும் தண்ணிமுறிப்புக்குளத்தில் மீன்பிடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிங்கள மீனவர்களும் இதன்போது தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.இதனையடுத்து மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் தமிழ் சிங்கள மீனவர்கள் தலா ஐவர் வீதம் குழு அமைக்கப்பட்டு இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவை எட்டுவதாக தீர்மானிக்கப்பட்டது.