தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பம் (காணொளி)

282 0

thellipalai-hospitelயாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பித்துள்ளதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி வை.திவாகர் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் புற்றுநோய் அபிவிருத்தி நிதி மூலம் குறித்த இரு சிகிச்சைகளுக்குரிய வைத்திய உபகரணங்கள் 4 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டு இன்று தொடக்கம் அதற்குரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்தியக்கலாநிதி எஸ்.கிரிதரனால் இன்று என்டோஸ்கோபி அலகு நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியர்களால் என்டோஸ்கோபி சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது.