நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

248 0

201612201006129219_anbumani-ramadoss-says-irrigation-projects-should-be_secvpfதொழிலாளர்கள் வேலைத்தேடி வெளியூர் செல்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியவத்தும் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் வேலைத்தேடி வெளியூர் செல்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முக்கியவத்தும் அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பா.ம.க இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அரூர் ஒன்றியம் சோலைக்கொட்டாய், எச்.ஈச்சம்பாடி, கொங்கவேம்பு, மாம்பட்டி, சந்திராபுரம், நாரியம்பட்டி, செல்லம்பட்டி புதூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மக்களை குறைகளை கேட்டறிந்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்க திட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு நீர்தேக்க திட்டம், கே.ஈச்சம்பாடி நீர்த்தேக்க திட்டம், செனக்கல் நீர்த்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்த்தேக்க திட்டங்கள் உள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டங்கள் வாயிலாக ஏரிகளை தூர்வாருதல், கால்வாய்களை தூய்மை செய்தல், கிடப்பில் உள்ள நீர்த்தேக்க திட்டப்பணிகளை செய்தல் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் இந்த மாவட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் குறையும்.

தர்மபுரி மாவட்ட மக்கள் பிழைப்புக்காக பெங்களூரு, கோவை, திருப்பூர், சென்னை, கேரளா உள்ளிட்ட வெளியிடங்களுக்கு கூலி வேலைகளுக்கு செல்லும் சூழ்நிலைகள் உள்ளது. தொழிலாளர்கள் வேலைத்தேடி இடம் பெயர்வதை தடுக்க தர்மபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியவத்தும் கொடுத்தால், தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாவட்டத்திலேயே வேலைகள் கிடைக்கும், விவசாய பணிகள் மேம்பாடு அடையும் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை. ஆனால் எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. ஆட்சிக்கு வருவதற்கான சூழ்நிலைகள் தற்போது நிலவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.