தடுப்பூசி: குருதி உறைவால் 06 பேருக்கு பாதிப்பு ; 03 பேர் உயிரிழப்பு – பாராளுமன்றத்தில் பவித்ரா

269 0

இலங்கையில் அஸ்ட்ரா-ஜெனெக்கா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னர்   குருதி உறைதலால் 06 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாக  இன்று பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.