லொறி – முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து

60 0

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.

கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.