காங்கேசன் துறை சிமெந்து தொழிற்சாலையின் ‘விதி’ ஊசலாடுகிறது

91 0

காங்கேசன்துறை  (கே.கே.எஸ்) சிமெந்து  தொழிற்சாலைக்கு சொந்தமான 100 ஆண்டு உத்தரவாதத்துடன் ஜேர் மனியில்  இருந்துகொள்வனவுசெய்யப்ப ட்டிருந்த 110 மீட்டர் நீளமுள்ள சூளை உள்ளிட்ட பழையதும் புதிய துமான இயந்திராதிகள்  அனைத்தும் 2010 முதல் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டன.

காணாமல் போன இயந்திரங்களுக்குஇதுவரை  ஒருவரினாலும்   இன்னும் பொறுப்புக் கூறப்படவில்லை.அவற்றை விற்றவர் யார்?, எந்த நோக்கத்திற்காக அந்தப்  பணம் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது, ஆனால் சிமெந்து  தொழிற்சாலையின் 20க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர், ஏனெனில் அவர்களின் முதலீடுகள்விவ காரம்  தீர்க்கப்படாமல் உள்ளது..

மேலும், 2021 பெ ப்ரவரியில் , தொழிற்சாலையில் உள்ள அனைத்து உலோகங்களையும் விற்பனை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்  அளித்தது, ஆனால்  இலங்கைசிமெந்துகூட்டுத்தாபனத்தின்   துணை நிறுவனமான லங்கா சிமென்ட் லிமிடெட் (எல்.சி.எல்) 40 சதவீத பங்குகளைக் கொண்டிருந்ததுடன் 1983இலிருந்து  புதிய சிமெந்து  தொழிற்சாலையை நடத்தியது, இதுதொடர்பாக அதனுடன் ஆலோசிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர் .

முன்னதாக, அனைத்து உலோகங்களையும் அகற்றுவதற்கான கேள்விமனுக் கோரலுக்கு  கைத்  தொழில்துறை அமைச்சு  அழைப்பு விடுத்திருந்தது .,அதற்கும்   ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்த.எல்.சி.எல் இன் இணக்கப்பாடு பெறப்பட்டிருக்கவில்லை.
இந்தப் பின்னணியில், மீதமுள்ள தொழிற்சாலை இயந்திரங்களில் 40 சதவீதத்தை அகற்றுவதற்கு  எவராவது வருவது குறித்துகாங்கேசன்துறை [ கே.கே.எஸ்] மற்றும் தெல்லிப் பளை  மக்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.

கே.கே.எஸ். சிமெந்து தொழிற்சாலையின் சுருக்கமான வரலாறு

கே.கே.எஸ் சிமெந்து  தொழிற்சாலை 1950 ஆம் ஆண்டில் கைத்தொழில் திணைக்களத்தின் கீழ் தொடங்கப்பட்டு 1956 ஆம் ஆண்டில் காங்கேசன் சிமென்ட் வே ர்க்ஸ் (கே.சி.டபிள்யூ) என்ற பெயரில் ஒரு பொது க் கூட்டுத்தாபனமாக  மாற்றப்பட்டது,

இது பின்னர் சிமெந்து கூட்டுத்தாபனம்  என்று அழைக்கப்பட்டது. அதே வளாகத்தில் 1983 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட லங்கா சிமென்ட் லிமிடெட் (எல்.சி.எல்) ஒரு புதிய தொழிற்சாலையில் ஜே ர்மனியை சேர்ந்த  இயந்திரங்கள் இருந்தன. இயந்திரங்களின் மதிப்பு சுமார் 450 பில்லியன் ரூபாய்[4500கோடி ரூபா ].

பழைய மற்றும் புதிய சிமெந்து  தொழிற்சாலை இயக்கப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 3,100 மெட்ரிக்தொன்  சிமெந்து  உற்பத்தி செய்யப்பட்டது, உற்பத்தி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதும்,  யுத்தம் காரணமாகதொழிற்சாலையை இராணுவம் கையகப்படுத்தியதும்1990ஜூன் 15,இல்உற்பத்தி இடை  நிறுத்தி வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், விடையளிக்கப்படாத கேள்வி என்னவென்றால், இப்போது இராணுவம்  நிலைகொண்டிருக்கும் காங்கேசன்துறைசிமெந்து   தொழிற்சாலையின் கதி என்ன? என்பதாகும்.தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை விற்க உத்தரவிட்டால் தொழிற்சாலை நிலம் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த தொழிற்சாலை உயர் பாதுகாப்புவலயத்தில்  (எச்.எஸ்.இசட்) அமைந்துள்ளதுடன்  காங்கேசன் துறை  மீன்பிடி துறைமுகத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில்இருக்கிறது. (துறைமுகம் இப்போது கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ளது) இது பொதுமக்களுக்கு விடுவிக்கப் படவில்லை.

ஆயினும்கூட, மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், போருக்குப் பின்னரான  காலத்தில் நாட்டின் அபிவிருத்தியை  காரணம் காட்டி, கே.கே.எஸ்சிமெந்து  தொழிற்சாலையை ‘விற்க’ அல்லது ‘குத்தகைக்கு விடுவதற்கான  ’ தனது நோக்கத்தை அரசாங்கம் இதுவரை  வெளிப்படுத்தவில்லை.தற்போது, எல்.சி .எல் . லை பிரதிநிதித்துவப்படுத்தும் கே.கே.எஸ் சிமெந்து  தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கான  பொறுப்பாளர் அங்கு அமர்ந்திருக்கிறார்,

ஆனால் கடந்த 33 மாதங்களாக அவரது சம்பளம் வழங்கப்படவில்லை. யுத்தத்தின் காரணமாக ஜூன் 1990 இல் உற்பத்தி நிறுத்தப்படும் வரை தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு அவர் [ஊழியர்சேமலாபநிதி]  ஈபிஎஃப் மற்றும்ஊழியர் நம்பிக்கைநிதி   [ஈ .ரி . எப் ].ஆகிய நிதிகளை வழங்குகிறார்.கே.கே.எஸ் தொழிற்சாலை வளாகத்தின் 450 ஹெக்டய ரில் சுமார் 120 ஏக்கர் நிலத்தை எல்.சி.எல் வாங்கியி ருந்தது..2016ஏப்ரல் 27,  அன்று, அப்போதைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காங்கேசன் துறை  சிமெந்து  தொழிற்சாலையை (கே.சி.எஃப்) புதுப்பிக்க முயன்றாதுடன்  செயலிழந்திருந்த  கே.சி.எஃப் தளத்தில் சுற்றுப்பயணம்மேற்கொண்டிருந்தார்.


பாகிஸ்தான், இந்தியா, சீனா, கொரியா போன்ற பல நாடுகள் சிமெந்து  தொழிற்சாலையை பெற்றுக் கொள்ள  ஒரு ‘கூட்டு முயற்சி’யாக  நிர்வகிக்க  தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியி ருந்தன.. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ராஸ் அல் கைமா சிமென்ட்நிறுவனம்  கூட 100 மில்லியன் அமெரிக்க டொ லர் முதலீட்டில் காங்கேசன் துறை  சிமெந்து  தொழிற்சாலையை புதுப்பிக்க ஆர்வம் காட்டியது, ஆனால் அவை அனைத்தும்நிராகரிக்கப்பட்டன

தகவல்களின்படி, 2010 முதல் 540 லொறி  சுமைகளில் அனைத்தும்துண்டு  உலோகங்களாக அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, இப்போது கூட இயந்திரங்களின் பகுதிகளை அகற்றுவது தொடர்கிறது. இயந்திர திருட்டு குறித்து சிஐடியால் விசாரிக்கப்பட்ட போது இது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன வின் கீழ், மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு  (PRECIFAC) இராணுவத்தால் ரூ .100 மில்லியனுக்கும் அதிகமான தொகையை துண்டு  இரும்பாக அகற்றி விற்பனை செய்ததாக கூறப்படும் மோசடிகுற்றச் சாட்டு  குறித்து விசாரணைகளைத் தொடங்கியது.

விசாரணை ஆணைக்குழு  ஒரு முடிவை  காணவில்லை, இருப்பினும், கே.சி.டபிள்யூ மற்றும் எல்.சி.எல் மற்றும் பங்குதாரர்களுக்கு  தெரியாமல் , இயந்திரங்கள்  சிறிது சிறிதாகஅகற்றப்பட்டு  வளாகத்திலிருந்து மறைந்து போனது. தற்போது, பழைய சிமெந்து  தொழிற்சாலையின்  10%

இயந்திர பாகங்களும் எல்.சி.எல்.லின்     40% உலோக பாகங்களும் மட்டுமே உள்ளன
விசாரணையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச  (இப்போது நாட்டின் ஜனாதிபதி), காங்கேசன் துறை  (கே.கே.எஸ்) சிமெந்து  தொழிற்சாலை மற்றும் சிமெந்து  நிறுவனத்தை அகற்றுவதற்கும் அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை துண்டு  இரும்பாக விற்பனை செய்வதற்கும் ஒருபோதும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருந்தார். அவர் கையெழுத்திட்ட்டு  ஒப்புதல்  அளிக்கும்    எந்தவொரு  ஆவணத்தையும் அவர் பார்த்திருக்கவில்லை .

ஜேர்மன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து 100 ஆண்டு உத்தரவாதத்தை பெற்றிருந்தன.. இந்த இரும்புகையிருப்பு  ஷிராஸ் முகமது மற்றும் யூசுப் அஸ்தான் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஈ.எம்.வி. ஏகநாயக்க ஆகியோருக்குவிற்கப்பட்டிருந்தமை  சி. ஐ. டி . விசாரணையில் வெளிப்பட்டிருந்தது. இதுவரை எந்த கைதுகளும் இடம்பெற்றதாக  எந்த செய்தியும் இல்லை

பிரிட்டிஷ் தரத்துடன் ஒப்பிடத்தக்க சிமெந்து

பழைய தொழிற்சாலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஜிப்சம் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதாகும்..
1950 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் டட்லி சேனநாயக்க மற்றும் கைத்தொழில், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோரை வாழ்த்துவதற்காக ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது.. நிகழ்வின் அங்குரார்ப்பணம்  இலங்கைக்கு ஒரு சிறந்த சகாப்தமாக கருதப்பட்டது, ஏனெனில் இது ஆசியாவின் மிகப்பெரிய சிமெந்து  தொழிற்சாலைகளில் ஒன்றாகும்இந்த .பாரிய தொழிற்சாலையில் டீசல் நிலையம் இருந்தது, அது சிமெந்து  தொழிற்சாலைக்கு மின்சாரம் வழங்கியது நாட்டின் மிகப்பெரிய ஒன்றான இத்  தொழிற்சாலையில் 2,300 தொழிலாளர்கள் பணியாற்றின ர்.

தலா 450 கிலோவாட் (கிலோவாட்) உற்பத்தி செய்யும் ஆறு  750 கடல்குதிரை வலு  டீசல் என்ஜின்களை  இது  கொண்டிருந்தது., மேலும் இரண்டு 850 குதிரைவலு  இயந்திரங்கள் தலா 525 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. மூலப் பொருளான  சுண்ணாம்புகல்  குவாரியிலி ருந்து  கொண்டு வரப்பட்டது. சுண்ணாம்புக் கற்களை நசுக்கிய பெரிய தாடை நொறுக்கிகள் இருந்தன.

கல் உடைக்கும்  ஆலைகளும் இருந்தன. நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு களிமண்ணுடன் கலக்கப்பட்டது.. நீண்ட ஆலை குழிகள் இருந்தன, அவை மூலப்பொருளைக் காற்ற  முக த்தின் உதவியுடன் செலுத்தப்பட்டன. கூடுதலாக, தொழிற்சாலையின் சூளைஎண்ணெய் எரியும் சூளையாகும் இது நிலக்கரி சூளையைவிட மலிவானதாகும்.. வெளிநாட்டு ரகங்களுடன் ஒப்பிடும்போது சிமெந்து  விற்பனை விலை மிகக் குறைவாக இருந்தது.

அரைக்கப்பட்ட சிமெந்து சிமெந்து  ஆலைக்கு அனுப்பப்பட்டது, அது மேலும் தூளாக நசுக்கப்பட்டு குழாய் வழியாக சிமெந்து  குழிகளுக்கு அனுப்பப்பட்டது, அங்கிருந்து  பொதியிடும் உலைக்கு  மாற்றப்பட்டது. அங்கிருந்து ரயில்வாகனம்  மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
எல்.சி.எல் இயங்கும்போது அவர்கள் சிமெந்தை  மொத்தமாக கொண்டு செல்ல இரண்டு ரயில் இயந்திரங்களை வாங்கினர். இன்னும், தொழிற்சாலை வளாகத்திற்குள் ரயில் தடங்கள் உள்ளன. அப்போது தயாரிக்கப்பட்ட சிமெந்து பிரிட்டிஷ் தரநிலையை கொண்டிருந்தது.. தொழிற்சாலை மூடப்பட்டதருணத்தில் , ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 115,000தொன் களாகும்.

1990 ல் போர் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டபோது, தொழிற்சாலை பல ஆண்டுகளாக பாழடைந்து கிடந்தது. 2002 இல் சுமார் 400 தொழிலாளர்களுக்கு சுயவிருப்பின்மூலம் ஓய் வு பெறும் திட்டம் [ வி.ஆர்.எஸ் ]வழங்கப்பட்டது. இருப்பினும், இயந்திரதின்  பாகங்கள் 2010 முதல் திருடப்பட்டன (2009 ல் போர் முடிவடைந்த பின்னர்) மற்றும் 2015 ஆம் ஆண்டிலேயே  அந்த பாரிய இயந்திரங்களின் உதிரிகள் அகற்றப்பட்டு துண்டுகளாக  விற்கப்பட்டன.

இலங்கைசீமெந்துகூட்டுத்தாபனத்தின்  செயற்படும்  பணிப்பாளராக  இருந்த ரியாஸ் சாலி, இயந்திரங்களை அகற்றுவதுதொடர்பாக  தொழிற்சாலையின் சட்டரீதியான  உரிமையாளர்களிடமிருந்து எந்த அனுமதியும் கோரப்படவில்லை என்று கூறியிருந்தார்.1950 ஆம் ஆண்டு முதல் தொழிற்சாலை எந்தவொரு இடையூறும் இல்லாமல் அதிகபட்சமாக இயங்கும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக அந்த இடத்திலிருந்து நகர்த்தப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் இருந்தது.

2016 ஆம் ஆண்டில், அப்போதைய அமைச்சர் பதியுதீன் மற்றும் வடக்கு எம்.பி.க்கள் கே.சி.எப் பின் புத்துருவாக்கம்  குறித்து பல யோசனைகளை  அனுப்பியி ருந்தனர்.. காங்கேசன் துறை க்கு ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக காங்கேசந்துறை  சுண்ணாம்புகல்  படிமங்களை அகழ்வதைவிட , சாத்தியமானால் கிளிங்கரை  (சிமெந்து  மூலப்பொருள்) இறக்குமதி செய்யுமாறு அவர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்திருந்தனர்.

புதுப்பிக்கப்பட்ட கே.சி.எஃப் செயல்முறை வேறுபட்டதாக இருக்கும் என்றும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தாக சமீபகால  சிமெந்து தயாரிப்பு தொழில்நுட்பத்திற்கு அமைவானதாக இருக்கும்  என்றும் பதியுதீன் உறுதியளித்திருந்தார்.

அப்போது கொரியாவின் ஏ எப் கே ஓ குழு ஜிஎம் ஈ  எக் ஸ்  ஆனது 450 மில்லியன் அமெரிக்க டொ லர் நிதியுதவியில் காங்கேசன் துதுறை  (கே.கே.எஸ்) சிமெந்து தொழி ற் சாலையை  மீண்டும் திறக்க ஆர்வம் காட்டியது.

காங்கேசன் துறை யில்சிமெந்து உற்பத்திக்கான  சுண்ணாம்பு படிவு  இருப்பதுஅங்கு தொழிற்சாலையை நிறுவுவதில் பெரும் ஊக்கு விப் பாக  இருந்தது. 80 மில்லியன் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மிகப்பெரிய சுண்ணாம்புபடிவு  இன்னும் 100 ஆண்டுகளுக்கு சிமெந்து உற்பத்திக்கு போதுமானது என்று தெரிவிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு  3,500 மெட்ரிக்தொன்  பிரித்தெடுக்கப்பட்டாலும் கூட. இது லங்கா சிமெந்து நிறுவனங்களுக்கான போராட்டமாக மாறியது  சம்பளத்துடன்வைத்திருக்க  இணங்கி யி ருந்த வர்களுக்கு பணம் செலுத்தத் தவறியதால், பல தமிழ் ஊழியர்கள் கடன்  துன்பத்தில்  விழுந்ததுடன் சிலர் தங்கள் உயிரைக் கூட விட்டி ந்தனர்.

இந்த இரும்பு கையிருப்பு முகமது, அஸ்தான் மற்றும் ஏகநாயக்க ஆகியோருக்கு விற்கப்பட்டதாகவும், ஏகநாயக்கக்கு விற்கப்பட்ட இருப்புகளுக்கான வருமானமாக ரூ .75 மில்லியன் பெற ப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கே.கே.எஸ் சிமெந்து  தொழிற்சாலையின் மீதமுள்ள உலோக பாகங்களை விற்பதற்கு  தரகர்கள் கொண்டு வரப்பட்டனர் – எல்.சி.எல் நிறுவனத்திற்கான யாழ்ப்பாண செயல்பாட்டிற்கான  பொறுப்பதிகாரி  பி. விமலநாதன்

எல்.சி.எல் நிறுவனத்திற்கான யாழ்ப்பாண நடவடிக்கைக்கு பொறுப்பான அதிகாரி பி. விமலநாதன் தனது 33 மாத சம்பளத்திற்காகஇப்போதும் காத்திருக்கிறார்.. அவர் ஒரு சிறிய அறையில் அமர்ந்து அவரைப் பார்க்க வரும் ஊழியர்களின்ஈ பிஎஃப் மற்றும்ஈ  ரி .எப் நிதிவிடயங்களை கவனிக்கின்றார்.. வளாகம் இராணுவத்தின் கீழ் இருப்பதால், அவருக்கு மட்டுமே வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எல்.சி.எல் ஆலை 1950 ல் கட்டப்பட்ட தொழிற்சாலையை விட நான்கு மடங்கு பெரியது. 2021 ஏப்ரல் 10 இல்  கொழும்பிலிருந்து பல அதிகாரிகள் காங்கேசன்துறை  சிமெந்து தொழிற்சாலைக்கு வருகை தந்ததாக விமலநாதன் கூறினார். எல்.சி.எல்லின்  புதிய தலைவர், தொழில்துறை அமைச்சு செயலாளர் மற்றும் தொழிற்சாலையில் மீதமுள்ள இயந்திரங்களை வாங்குவது தொடர்பான சில தரகர்கள் தெல்லிபளை யின் பிரதேச செயலாளருடன் வந்திருந்தனர்.

அமைச்சரவை அங்கீகாரத்தின்  அடிப்படையில் மீதமுள்ள இயந்திரங்களை விற்க அவர்கள் விரும்பினர்.’ முதலில் எனது சம்பளத்தைப் பெறுவதற்கும் பின்னர் தொழிற்சாலையின் செயல்பாட்டை மறுதொடக்கம் செய்வதற்கும் நான் போராடினேன்’.

“ஈபிஎஃப் மற்றும் ஈ  ரி .எப் ..நிதி தேவைப்படுபவர்களை கவனிக்க  நான் நியமிக்கப்பட்டேன், தொழிலாளர்களுக்கு ஆறு மாத சம்பளத்தை மட்டுமே  நாங்கள் வழ ங்கி யிருந்தோம்  ஈ.பி .எஃப் மற்றும் ஈ .ரி எப் நிதிகள்  தொடர்பாக  தீர்த்துவைப்பதற்காக  எல்.சி.எல் என்னை நியமித்தது, ஆனால் 33 மாதங்களாக எனது சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இயந்திரங்களை விற்று என்னை இங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டி ருந்தனர்.”

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலையின் அவலநிலை குறித்து 515 படைப்பிரிவின்அதிகாரிக்கு  தகவல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். பழைய தொழிற்சாலை இயந்திரங்களின் மதிப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் எல்.சி.எல் இயந்திரங்களை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தலாம், என்றும் . கடந்த 33 மாதங்களாக  அறை வாடகையாக ரூ .1,500 செலுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விமலநாதன்அண்மையில் தொழிற்சாலைக்குசென்றபோது , பாதுகாப்பு அமைச்சின்  அனுமதி பெறாததால் வளாகத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


‘உற்பத்தியை மீள ஆரம்புப்பதா   என்பது அரசாங்கத்தின் விருப்பம், எல்.சி.எல்லினது  அல்ல’, – எல்.சி.எல் தலைவர் மகேஷ் அழகப்பெரும  காங்கேசன் துறையில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை  எல்.சி.எல்.வைத்திருப்பதாகஅதன் தலைவர்  கூறியுள்ளார். இயந்திரங்களை விற்பதற்கான பொறுப்பு    அமைச்சு மற்றும் இலங்கை சிமெந்து கூட்டுத்தாபனம் கொண்டிருக்கிறது. இப்போதுதுண்டு  பொருளாக இருக்கும் இயந்திரங்களின் பாகங்களை விற்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

1980 களில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் காலாவதியானவை, அவற்றை மாற்ற முடியும் என்பதும் அவரது கருத்து. தற்போது நான்கு கட்டமைப்புகள்  உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அந்த இயந்திரங்களை விற்க வேண்டியதேவைப்பாடு   பங்குதாரர்களின்விடயத்தை    ‘தீர்த்து வைப்பதற்கு ’ என்று ம் அவர் .கூறியுள்ளார்.“இப்போது கூட, கே.கே.எஸ் சிமெந்து  தொழிற்சாலையை நடத்துவதற்கு முதலீட்டாளர்கள் உள்ளனர், ஆனால் அது அவ்வளவு இலகுவானது  அல்ல. இருப்பினும், இது சிமெந்து கூட்டுத்தாபனம்  மற்றும் அமைச்சின் நலனுக்கு முக்கியமானது ”.என்று அவர் கூறியுள்ளார். ஒரு துணை நிறுவனமாக, எல்.சி.எல் தொடர்ந்து தொழிற்சாலையை நடத்துவதா இல்லையா என்பது குறித்து பங்குதாரர்களுடன் கலந்துரையாடலாம், ஆனால் சிமெந்து  கூட்டுத்தாபனம்  மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச வின் கீழ் உள்ள கைத்தொழில்துறை  அமைச்சு இதை முடிவு செய்ய வேண்டும்.

“நாங்கள் நடவடிக்கைகளைமுடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம்.,சகல தொழிலாளர்களின் நிலுவைத் தொகையையும் நாங்கள் செலுத்திவிட்டோம் ” என்று அழ கப்பெரும  மேலும் கூறியுள்ளார்.

இயந்திர திருட்டு தொடர்பான விசாரணையில், அவர் கூறுகையில், ‘இதுவரை யாரும் வரவழைக்கப்படாததால் ஜனாதிபதி ஆணைக்குழு  தனது விசாரணையை நிறைவு செய்து  விட்டது. ஆனால்  ஜனாதிபதி ஆணைக் குழுவிசாரணை தொடர்பாக   முடிவடைந்து  இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை என்று நான் சொல்ல வேண்டும். ”
உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தபோது சிமெந்து தொழிற்சாலையின் முன்னாள் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிமெந்தை   கே.கே.எஸ் தொழிற்சாலையில் மீண்டும்பொதி  செய்து விற்பனை செய்ததாக  அவர் மேலும் கூறினார். ஒரு அதிகாரி இப்போது எல்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவருக்கு  இன்னும் அவரது  சம்பளம்  செலுத்தப்பட வில்லை என்று கூறுகிறார். அவர்கள் முன்னாள் தலைமைத்துவத்தின்  அதிகாரிகள்என்றும் அவர்களை தான்  நியமிக்வில்லை,என்றும்  அவர் குறிப்பிட்டுள் ளார்.

எல்.சி.எல் நிறுவனத்தால் அந்த இயந்திர பாகங்களை விற்க எந்தகேள்விமனுக்கோரலும்   விடுக்கப்படவில்லை, ஆனால் பி.எல்.சி பட்டியலிடப்பட்ட நிறுவனமாக நாங்கள் பங்குச் சந்தையில் இல்லாததால்,நாங்கள் பொறுப்பை கொண்டிருப்பதால்  மீதமுள்ள இயந்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் பங்குதாரர்களின் கொடுப்பனவுகளைத் தீர்த்து வைப்பது குறித்துமுழு மையாக கலந்துரையாடப்பட்டது..


“சிமெந்து உற்பத்தியை மீளத்தொடங்குவது   தொடர்பானகலந்துரையாடல்கள்   இருந்தன, ஆனால் இது அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையிலான முடிவு. அது தொடர்பாக  நான் எதுவும்  கூறமுடியாது ”என்று அவர் கூறியுள்ளார்.

சிலோன்  ரு டே