ரவி உள்ளிட்ட 7 பேருக்கு பிணை வழங்கியமை தொடர்பில் மேன்முறையீடு

186 0

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளுக்கு கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 36.98 பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் தலா 10 இலட்சம் பெறுமதியான பிணையிலும், 50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்துள்ளதுடன் இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் குற்றவாளிகளுக்கு கொழும்பு விஷேட நீதாய நிதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 36.98 பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் தலா 10 இலட்சம் பெறுமதியான பிணையிலும், 50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்துள்ளதுடன் இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் அறியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.