டிசம்பர் முதல் ஏப்ரல் வரை 78 சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா உறுதி

38 0

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகைத் தந்த  78 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமை ச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி , கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 14 ஆம் திகதி வரை மொத்தமாக 11,961 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வரு கைத் தந்துள்ளதுடன் , இதில் 78 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச் சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் .

 

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால், இவர்கள் உள்ளூர் வாசி களுடன் தொடர்பில் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார் .

இலங்கைக்கு வருகைத் தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளுடன் ஒப் பிடும் போது சுற்றுலாப் பயணிகளிடையே தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைவு என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சுகாதார அதிகாரிகள் ஏதேனும் புதிய கட்டுப்பாடு களை அறிமுகப்படுத்தினால், அந்த கட்டுப் பாடுகளை அமுல்படுத்த சுற்றுலா அதிகாரிகள் தயாராக உள்ளார்கள் எனவும் ரணதுங்க மேலும் தெரிவித்தார் .