தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)

281 0

 

sequence-01-still041யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஈ.பி.டீ.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே டக்ளஸ் தேவானந்தா இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கொலைக்கு தமது கட்சியினரோ அல்லது தற்போது தண்டனை விதிக்கப்பட்டவர்களோ எதுவிதத்திலும் சம்பந்தப்படவில்லை என மறுதலித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இது தமது கட்சி உறுப்பினர்களின் செல்வாக்கை இழக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குற்றச்சாட்டு என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தில் தமது கட்சியின் சார்பாக சாட்சியமளிப்பதற்கு விண்ணப்பித்த போது தமக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்தும் இது தொடர்பாக பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.