வாதுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதி ஆசனத்திலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர், காலி- அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

